sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'மிஸ்டு கால்' கொடுத்தால் மாணவர் சேர்க்கை வீட்டுக்கே வரும் அரசு பள்ளி ஆசிரியர்கள்

/

'மிஸ்டு கால்' கொடுத்தால் மாணவர் சேர்க்கை வீட்டுக்கே வரும் அரசு பள்ளி ஆசிரியர்கள்

'மிஸ்டு கால்' கொடுத்தால் மாணவர் சேர்க்கை வீட்டுக்கே வரும் அரசு பள்ளி ஆசிரியர்கள்

'மிஸ்டு கால்' கொடுத்தால் மாணவர் சேர்க்கை வீட்டுக்கே வரும் அரசு பள்ளி ஆசிரியர்கள்


ADDED : ஏப் 13, 2024 07:25 AM

Google News

ADDED : ஏப் 13, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி : 'மிஸ்டு கால்' கொடுத்தால் அவர்களின் வீடுகளுக்கே சென்று, ஆட்டையாம்பட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர் சேர்க்கை நடத்துகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 6 முதல் பிளஸ் 2 வரை, 570 மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு, 15 ஆண்டுக்கு முன் வரை, 1,000க்கும் மேற்பட்டோர் படித்த நிலையில் அதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதை தடுக்க, தலைமையாசிரியர் விஜயராகவன் உள்ளிட்ட ஆசிரியர்கள், கடந்தாண்டு ஆலோசித்தனர். அதன் தொடர்ச்சியாக, வீடு தேடி சென்று மாணவர்களை சேர்த்தனர்.

மேலும் புதுமையாக, 94899 77499, 94435 52428, 63693 87171 ஆகிய மொபைல் எண்களில், 'மிஸ்டு கால்' கொடுத்தால் போதும், மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அறிவித்தனர். அதன்படி மிஸ்டு கால் கொடுத்தால், அப்பள்ளி ஆசிரியர்கள், அந்த எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்து, சம்பந்தப்பட்ட மாணவரின் வீட்டுக்கே சென்று, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளில் சேர்த்துக்கொள்கின்றனர்.

இதன்படி கடந்த கல்வியாண்டில், 5 பேர் சேர்க்கப்பட்டனர். நடப்பு கல்வியாண்டும், இதுதொடர்பாக அறிவிப்பு செய்து, பள்ளியில் பேனர் வைத்துள்ளனர். தற்போது அதன்படி, 2 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

மேலும் அந்த பேனரில், 'அரசு பள்ளியில், 6 முதல் பிளஸ் 2 வரை படித்தால், எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங், வேளாண் கல்லுாரி, ஐ.ஐ.டி., போன்ற படிப்புகளுக்குரிய செலவை அரசே ஏற்கும்; மருத்துவம், பொறியியல் படிப்புகளில், 7.5 சதவீத இடஒதுக்கீடு; அரசு பணியில் 20 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட அரசின் அனைத்து சலுகைகளும் பெற்றுத்தரப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us