/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டாசு தீப்பொறி பறந்து மாட்டு கொட்டகையில் தீ
/
பட்டாசு தீப்பொறி பறந்து மாட்டு கொட்டகையில் தீ
ADDED : நவ 01, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டாசு தீப்பொறி பறந்து
மாட்டு கொட்டகையில் தீ
ஓமலுார், நவ. 1-
ஓமலுார், பல்பாக்கியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 65. முன்னாள் எம்.எல்.ஏ.,வான இவர் வீடு அருகே, மாட்டு கொட்டகை உள்ளது. அப்பகுதியில் நேற்று காலை, 9:30 மணிக்கு, தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்தனர். அப்போது பனை ஓலையால் வேயப்பட்ட மாட்டுக்கொட்டகையில் பட்டாசு வெடி தீப்பொறி பட்டது. அதில் கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த மக்கள், மாடுகளை வெளியேற்றினர். பின் ஓமலுார் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் கொட்டகை சேதம் அடைந்தது.

