தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பயிர்களை உரமாக்குவதால் மகசூல் அதிகரிக்கும்'

பயிர்களை உரமாக்குவதால் மகசூல் அதிகரிக்கும்'

பயிர்களை உரமாக்குவதால் மகசூல் அதிகரிக்கும்'


ADDED : ஜூலை 13, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2025 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி, ''பல்வேறு வகை பயிர்களை உரமாக்குவதால் மண் வளம் பெருகி மகசூல் அதிகரிக்கும்,'' என, பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ஒரு வயலில் ஒரே நேரத்தில், 7க்கும் மேற்பட்ட விதைகளை ஒன்றாக விதைத்து, அவை பூக்கும் பருவத்தில் மண்ணில் மடக்கி உழவு செய்வதால் மண் வளம் பெருகும். தானியங்களில், 2 வகை உள்ளன. எண்ணெய் வித்து ஒன்று. மற்றொன்று பசுந்தாள் வகை. இவை இரண்டிலும் தலா, 1 கிலோ வீதம், 7 கிலோ விதை, ஒரு ஏக்கருக்கு தேவை. அதில் எள், சோளம், ஆமணக்கு, தட்டைப்பயிர், அகத்தி, கொள்ளு, கேழ்வரகு, உளுந்து, நிலக்கடலை, சூரியகாந்தி, பச்சை பயிர், தினை, பனிவரகு, சாமை, மக்காச்சோளம் ஆகியவை முக்கியமானவை. பல வகை பயிர்களை விதைத்து, மண்ணில் மடக்கி உழவு செய்து,

அடுத்த பயிருக்கு உரமாக்குவது சிறந்த தொழில்நுட்பம். இதனால் மண் வளம் மேம்படுவதோடு அடுத்த பயிர்கள் வளர்ச்சி அதிகரித்து கூடுதல் மகசூல் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us