/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'அடகு' நகையை வேறு ஒருவரிடம் கொடுத்த ஊழியர்கள் லேம்ப் கூட்டுறவு சங்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்

ADDED : டிச 25, 2025 05:27 AM
ஏற்காடு:ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும் பல்நோக்கு கூட்டுறவு சங்-கத்தில், ஓராண்டுக்கு முன், கொண்டையனுாரை சேர்ந்த ராமசாமி, 5 பவுன் சங்கிலியை, ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்தார். நேற்று முன்தினம் அந்த நகைக்கு வட்டி கட்டி திருப்பி வைக்க, அடமானம் வைத்த சீட்டை, கூட்டுறவு சங்க ஊழியர்க-ளிடம் காட்டினார். அதற்கு, 'உங்கள் நகையை ஏற்கனவே திருப்பி பெற்றுவிட்டீர்கள்' என கூறி, சுசீந்திரன் என்பவர், அடகு ரசீது சீட்டை கிழித்துள்ளனார்.
ராமசாமி, இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தார். அங்கு வந்த ராமசாமியின் குடும்பத்தினர், கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நகையை யாரிடம் கொடுத்தீர்கள் என கேட்டனர்.விசாரித்ததில், லேம்ப் கூட்டுறவு சங்கத்தில் இருந்து ராமசா-மிக்கு கடிதம் அனுப்பப்பட்டதும், அது தவறுதலாக அதே ஊரில் வசிக்கும் வேறு ராமசாமிக்கு சென்ற நிலையில், அவர் வந்து, சங்-கிலியை வாங்கி சென்றதும் தெரிந்தது. தொடர்ந்து அந்த ராமசா-மியை கண்டுபிடித்த சங்க பணியாளர்கள், நகையை திருப்பி கொடுக்கும்படி கூறினர். அவர், நகையை கொண்டுவந்து செயலர் லட்சுமணனிடம் கொடுத்தார்.
பின் நகை உரிமையாளர், அந்த நகையை சங்கத்தில் மீண்டும் அடமானம் வைக்கும்படி கூறினார். ஆனால், 'சங்கத்தில் பண-மில்லை. நீங்கள் கட்டவேண்டிய முழு பணத்தையும் கட்டிவிட்டு நகையை பெற்றுக்கொள்ளுங்கள்' என கூறினர். அதற்கு பணத்தை எடுத்து வருவதாக கூறி, சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் சென்-றனர். ஆனால் அடகு வைத்த நகையை, எந்த ஆதாரமும் இல்-லாமல், தவறுதலாக வேறு ஒருவருக்கு கொடுத்து, சங்க அதிகா-ரிகள் குளறுபடி செய்ததால், சம்பந்தப்பட்ட ராமசாமி குடும்பத்-தினர் அவதிக்கு ஆளாகினர்.