/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அமைச்சரவை மாறினாலும் செயலில் மாற்றம் இருக்காது; வாசன் விமர்சனம்
/
அமைச்சரவை மாறினாலும் செயலில் மாற்றம் இருக்காது; வாசன் விமர்சனம்
அமைச்சரவை மாறினாலும் செயலில் மாற்றம் இருக்காது; வாசன் விமர்சனம்
அமைச்சரவை மாறினாலும் செயலில் மாற்றம் இருக்காது; வாசன் விமர்சனம்
ADDED : அக் 07, 2024 03:06 AM
ஓமலுார்: ''தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருந்தாலும், ஆட்சியாளர்-களின் செயல்பாட்டில் மாற்றம் இருக்காது,'' என, த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்தார்.
த.மா.கா., சார்பில் சேலம் மேற்கு மாவட்டம் ஓமலுார், காமலா-புரம் பகுதிகளில் மருத்துவ முகாம், கட்சி கொடியேற்று விழா, போயர் மக்களுக்கு நலத்திட்ட விழாவில் பங்கேற்க, அக்கட்சி தலைவர் வாசன், நேற்று சேலம் வந்தார். விமான நிலையத்தில் அளித்த பேட்டி:தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருந்தாலும், ஆட்சியாளர்-களின் செயல்பாட்டில் மாற்றம் இருக்காது. மக்கள் நலனில் அக்-கறை உள்ள அரசாக இருந்தால் மதுக்கடைகளை உடனே மூடலாம். எப்படி இருந்தாலும் சட்டசபை தேர்தலுக்குள் மதுக்க-டைகளை மூடக்கூடிய உறுதியான முடிவை எடுக்க வேண்டும்.மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையின்றி செயல்படுகிறது. அதன்படி தமிழகத்தில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்-டத்துக்கு நிதி ஒதுக்கியுள்ளது. கல்வியில் அரசியல் செய்யும் தமி-ழக அரசின் நிலைப்பாடு வருத்தத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், சங்ககிரி, இடைப்பாடி மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ரகுநந்தகுமார், மாநகர் மாவட்ட தலைவர் உலகநம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்-தனர்.

