/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தென்னை, கரும்புகளை சேதப்படுத்திய யானை
/
தென்னை, கரும்புகளை சேதப்படுத்திய யானை
ADDED : அக் 24, 2024 03:19 AM
டி.என்.பாளையம்: டி.என் பாளையம் அடுத்த, கள்ளிப்பட்டி அருகே எரங்காட்டூர் பனங்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி சபரிதரன், 46. அதே பகுதியில் இவருக்கு சொந்தமான, மூன்றரை ஏக்கரில் தென்னை, கரும்பு பயிரிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை வனப்-பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, சபரிதரன் தோட்-டத்தில் புகுந்து தென்னங்கன்றுகள், கரும்புகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது. மேலும், தோட்டத்தில் போடப்பட்ட பைப் லைன் மற்றும் கம்பி வேலிகளை சேதப்படுத்தி சென்றுள்-ளது. காலை தோட்டத்திற்கு வந்த சபரிதரன் அதிர்ச்சியடைந்தார். தோட்டத்தில் யானை வந்ததற்கான கால் தடங்கள் பதிவாகி உள்-ளது. இதே போல் அதே பகுதியில் சுரேஷ், 32, என்பவர் தோட்-டத்தில் புகுந்த யானை, பயிரிடப்பட்ட கரும்பை தின்றும் சேதப்-படுத்தியும் உள்ளது.

