/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேர்தல் பணி பயிற்சி; வராதோருக்கு எச்சரிக்கை
/
தேர்தல் பணி பயிற்சி; வராதோருக்கு எச்சரிக்கை
ADDED : மார் 28, 2024 07:15 AM
சேலம் : சேலம் மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும், 16,092 அலுவலர்களுக்கு, கடந்த, 24ல் முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. சட்டசபை தொகுதி வாரியாக, 11 மையங்களில் பயிற்சி வகுப்பு தனித்தனியே நடந்தது.
இதில், 1,781 அலுவலர்கள் பயிற்சிக்கு வரவில்லை. அவர்களிடம் விளக்கம் கேட்டு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் தனித்தனியே, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி கூறுகையில், ''தேர்தல் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்ட அலுவலர்களில், 10 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆகிவிட்டனர்,'' என்றார்.அரசு ஊழியர் தெரிவிக்கும் விளக்கம் திருப்தி இல்லையென்றாலும், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்காவிட்டாலும், '17ஏ' பிரிவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

