/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'4 கமிஷனர்கள் மாறியும் குடிநீர் பிரச்னை தீரவில்லை'
/
'4 கமிஷனர்கள் மாறியும் குடிநீர் பிரச்னை தீரவில்லை'
'4 கமிஷனர்கள் மாறியும் குடிநீர் பிரச்னை தீரவில்லை'
'4 கமிஷனர்கள் மாறியும் குடிநீர் பிரச்னை தீரவில்லை'
ADDED : அக் 25, 2024 01:13 AM
'4 கமிஷனர்கள் மாறியும்
குடிநீர் பிரச்னை தீரவில்லை'
இடைப்பாடி, அக். 25-
இடைப்பாடியில் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, தலைவர் பாஷா தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., கவுன்சிலர் காளியப்பன்: கொத்தாபாளையத்தில் குடிநீர் பிரச்னை வந்த பின், 4 கமிஷனர்கள் மாறிவிட்டனர். ஆனால் குடிநீர் பிரச்னை தீரவில்லை.
பாஷா: கமிஷனர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்.
அ.தி.மு.க., கவுன்சிலர் ராம்குமார்: வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருந்து காட்டூர் செல்லும் வழியே மின்விளக்குகள் இல்லை. என் வார்டில் இதுவரை, 11 மின்விளக்குகள் மட்டும் போடப்பட்டுள்ளன. விளக்கு இல்லாத கம்பங்களில், எல்.இ.டி., பல்புகள் பொருத்த வேண்டும். மேலும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
பாஷா: நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க., கவுன்சிலர் தங்கதுரை: மோட்டூரில் சேதமடைந்த குடிநீர் தொட்டியை இடிக்க வேண்டும்.
கமிஷனர் கோபிநாத்: ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
முடிவில், 69 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
'கொசுத்தொல்லை அதிகரிப்பு'
ஓமலுார் டவுன் பஞ்சாயத்து தலைவி செல்வராணி தலைமையில் கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. அதில் மழைக்காலங்களில் பல இடங்களில் சாக்கடை கழிவு தேங்கி மழைநீர் வெளியேறி வருவதாகவும், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாகவும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். அதற்கு செல்வராணி, 'துாய்மை பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றை முறையாக அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்கின்றனர்' என்றார்.
பின், மழைக்காலங்களில் பல இடங்களில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளதால் மக்கள் அச்சப்படுகின்றனர் என, கவுன்சிலர்கள் தெரிவித்தனர். அதற்கு செயல் அலுவலர் நளாயினி, 'அனைத்து வார்டுகளிலும் முக்கிய இடங்களில் புதிதாக இரு மின் விளக்குகள் பொருத்தப்படும்' என்றார். பின், 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் முடிந்தது. துணைத்தலைவி புஷ்பா உள்ளிட்ட
கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

