/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆண்டுக்கு 130 முட்டை அசில் கோழி வேண்டுமா?
/
ஆண்டுக்கு 130 முட்டை அசில் கோழி வேண்டுமா?
ADDED : டிச 21, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, டிச. 21-
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் அறிக்கை:
வேளாண் அறிவியல் நிலையத்தில் ஓராண்டுக்கு, 90 முதல், 130 முட்டைகள் இடும், 4 - 5 வார அசில் பெரு வெடை கோழிக்குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளன. அவை, 14 - 15 வாரத்தில், சேவல், 1.350 கிலோ, பெட்டை, 1.150 கிலோவாக இருக்கும். இறைச்சி விற்பனைக்கு ஏற்ற ரகம்.
கோழி குஞ்சுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வேளாண் அறிவியல் நிலையத்தில், 45 நாட்களுக்கு ஒரு முறை அசில் கோழிக்குஞ்சுகள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. தேவைப்படுவோர் முன்பதிவு செய்து பெற்றுகொள்ளலாம். விபரங்களுக்கு, 90955 13102 என்ற எண்ணில் அழைக்கலாம்.

