/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்த பக்தர்கள்
/
ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்த பக்தர்கள்
ADDED : ஏப் 12, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி : ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த, 2ல் தொடங்கியது.
நேற்று பொங்கல் வைத்தல் நடந்தது. இதற்கு மூலவர், உற்சவர் அம்மன்களுக்கு அபி ேஷகம் செய்து மதுரை மீனாட்சி அம்மனை, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள், வீடுகளில் விரதம் இருந்து வளர்ந்து வந்த முளைப்பாரிகளுடன் கோவிலுக்கு வந்து ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலையில் அக்னி கரகம், தீச்சட்டி, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

