/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்க தொடர் உண்ணாவிரதம் நடத்த முடிவு
/
பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்க தொடர் உண்ணாவிரதம் நடத்த முடிவு
பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்க தொடர் உண்ணாவிரதம் நடத்த முடிவு
பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்க தொடர் உண்ணாவிரதம் நடத்த முடிவு
ADDED : டிச 16, 2025 08:04 AM

பனமரத்துப்பட்டி: சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி, 2,137 ஏக்கர் பரப்பளவில் ஜருகுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. குடிநீர் தேவைக்கு, 1911ல், ஆங்கிலேயர்கள் உருவாக்கிய ஏரியின் நிலத்தடி நீர் மூலம், 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் செழிக்கவும் உதவியது. பத்துக்கும் மேற்பட்ட துணை ஏரிகள் மூலம், 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, போதிய மழை இல்லாமல் ஏரி வறண்டதால், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைத்து, சுற்றுலா தலமாக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை, பனமரத்துப்பட்டி ஏரி வளாகத்தில், தமிழ்நாடு ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்கம் சார்பில், ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், விவசாயிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் ஏரி சீரமைப்பு குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். பனமரத்துப்பட்டி ஏரி போராட்ட குழு சார்பில் வரும் ஜன., 5 முதல் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபடுவது என, முடிவு செய்தனர்.
தமிழ்நாடு ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சரவணன், காமராஜர் உழவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி, அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

