/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மஹா சிவராத்திரியை ஒட்டி விடிய விடிய பக்தர்கள் தரிசனம்
/
மஹா சிவராத்திரியை ஒட்டி விடிய விடிய பக்தர்கள் தரிசனம்
மஹா சிவராத்திரியை ஒட்டி விடிய விடிய பக்தர்கள் தரிசனம்
மஹா சிவராத்திரியை ஒட்டி விடிய விடிய பக்தர்கள் தரிசனம்
ADDED : மார் 09, 2024 01:13 AM
சேலம், சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி, பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உட்பட பல்வேறு திரவியங்களால் அபி ேஷகம் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு முதல் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, இரவு, 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. விடிய விடிய நடந்த பூஜைகளில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
* இரண்டாவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில், சீரகாபாடி 1008 சிவாலயம், கோரிமேடு என்.ஜி.ஜி.ஓ., காலனி ஞானாம்பிகை உடனுறை ருத்ரேஸ்வரர் கோவில்களில் நடந்த பூஜைகளில் பக்தர்கள் வழிபட்டனர். மேலும் மாவட்டத்தில் பல்வேறு சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.