/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேம்பால இணைப்பில் விரிசல் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
/
மேம்பால இணைப்பில் விரிசல் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
மேம்பால இணைப்பில் விரிசல் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
மேம்பால இணைப்பில் விரிசல் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
ADDED : டிச 29, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி, டிச. 29-
சேலம், கந்தம்பட்டியில், 8 ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம் கட்டப்பட்டது. அந்த வழியே, கனரகம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்கின்றன.
ஆனால் முறையான பராமரிப்பின்றி, பாலத்தின் இணைப்பு பகுதி கான்கிரீட் பூச்சு பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இணைப்பு பட்டைகள் விலகி, அதை தாங்கி பிடித்துள்ள கம்பி நீட்டிக்கொண்டிருக்கிறது.
இது வாகன டயர்களை பதம்பார்த்து, பஞ்சராக்கி விடும் என்பதோடு, விபத்துக்கு வழிவகுக்கும். அதனால் இணைப்பு பட்டை பகுதி பள்ளங்களை உடனே சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.