/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மத்திய சிறைக்கு ரூ.6 லட்சத்தில் புதிய நுழைவு வாயில் பணி துவக்கம்
/
மத்திய சிறைக்கு ரூ.6 லட்சத்தில் புதிய நுழைவு வாயில் பணி துவக்கம்
மத்திய சிறைக்கு ரூ.6 லட்சத்தில் புதிய நுழைவு வாயில் பணி துவக்கம்
மத்திய சிறைக்கு ரூ.6 லட்சத்தில் புதிய நுழைவு வாயில் பணி துவக்கம்
ADDED : ஜன 02, 2024 10:19 AM
சேலம்: சேலம் மத்திய சிறைக்கு, ஆறு லட்சம் ரூபாய் செலவில், புதிய நுழைவு வாயில் அமைக்கும் பணிகளை, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் துவக்கி உள்ளது.
சேலம் மத்திய சிறையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 868 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைதிகளை விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லும் நிலையில், பெரிய வாகனங்கள் சிறைக்குள் செல்லமுடியாத வகையில், நுழைவு வாயில் பகுதி சிறியதாக இருந்தது.
இதனால், சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு கைதிகளை சிறையில் இருந்து அழைத்து வரும் நிலையில், அவர்கள் தப்பித்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதையடுத்து, சிறைக்குள் பெரிய வாகனங்கள் சென்று வரும் வகையில் நுழைவு வாயிலை பெரிதுப்
படுத்த அரசிடம் அனுமதி கோரப்பட்டது.
ஆறு லட்சம் ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியதையடுத்து, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. பழைய நுழைவு வாயில் இடித்து அகற்றப்பட்டதையடுத்து, சிறைக்குள் வாகனங்கள், ஊழியர்கள் செல்ல மாற்று பாதையை சிறை நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது.
நுழைவு வாயில் அமைக்கும் பணிகள், இரண்டு மாதத்துக்குள் முடிந்து விடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

