sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அனைத்து துவக்க பள்ளிகளிலும் கணினி வழி கற்றல் பிப்.,ல் அமல்

/

அனைத்து துவக்க பள்ளிகளிலும் கணினி வழி கற்றல் பிப்.,ல் அமல்

அனைத்து துவக்க பள்ளிகளிலும் கணினி வழி கற்றல் பிப்.,ல் அமல்

அனைத்து துவக்க பள்ளிகளிலும் கணினி வழி கற்றல் பிப்.,ல் அமல்


ADDED : ஜன 14, 2025 03:07 AM

Google News

ADDED : ஜன 14, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழகத்தில் உள்ள அனைத்து துவக்கப் பள்ளிகளிலும், பிப்ரவரி முதல், கணினி வழி கற்றல் முறையை அமல்படுத்த உத்தரவிடப்-பட்டுள்ளது. இதற்காக வீடியோ பாடங்கள் கொண்ட 'மணற்-கேணி' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக-ளுக்கு கம்ப்யூட்டர், மடிக்கணினி மற்றும் ஆசிரியர்களுக்கு டேப் வழங்கப்பட்டுள்ளன. துவக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அறைகள், நடுநிலைப்பள்ளிகளில்

ஹைடெக் லேப் அமைக்கப்-பட்டு வருகிறது. கணினி சார்ந்த புதிய அறிவியல் நுட்பங்க-ளுடன், கற்பித்தலில் உதவி செய்ய, பள்ளிக்கல்வித்துறை சார்பில், மணற்கேணி எனும் செயலி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்-டுள்ளது.இதில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் நிறுவனத்தால் உரு-வாக்கப்பட்ட, 120 வீடியோக்கள் முதல் கட்டமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையி-லான பாடங்கள், உயர்கல்வி

வழிகாட்டி வீடியோ, நீட், ஜே.இ.இ., கிளாட் போட்டித்தேர்வு பயிற்சிக்கான வீடியோ, மாதிரி வினாத்தாள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்து, இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும்

வழங்கப்-பட்டுள்ளது.செயலியில் உள்ள வீடியோக்களை, மடிக்கணினி அல்லது கம்ப்-யூட்டரில் https://manarkeni.tnschools.gov.in என்ற இணைய முகவரி-யிலும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த செயலியை பயன்படுத்துவது குறித்து,

தொடக்கக்கல்வி இயக்குனரகம் வெளி-யிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்க-ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, ஜன., 20 முதல், 25க்குள், சிறப்பு முகாம் நடத்தி, ஜன., 31க்குள், அனைத்து ஆசிரியர்களும், செய-லியை பயன்படுத்த, வீடியோக்களை

பதிவிறக்கம் செய்ய கற்றுக்-கொள்ள வேண்டும். பிப்ரவரி முதல், அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கணினியுடன் கூடிய கற்றல்-கற்-பித்தல் செயல்பாடுகள் நடைபெறுவதை, மாவட்ட கல்வி அலுவ-லர்கள்

உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்-ளது.






      Dinamalar
      Follow us