/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேர்வு முடிவு வெளியானதாக வதந்திசி.பி.எஸ்.இ., மாணவர்கள் ஏமாற்றம்
/
தேர்வு முடிவு வெளியானதாக வதந்திசி.பி.எஸ்.இ., மாணவர்கள் ஏமாற்றம்
தேர்வு முடிவு வெளியானதாக வதந்திசி.பி.எஸ்.இ., மாணவர்கள் ஏமாற்றம்
தேர்வு முடிவு வெளியானதாக வதந்திசி.பி.எஸ்.இ., மாணவர்கள் ஏமாற்றம்
ADDED : மே 04, 2025 01:34 AM
ராசிபுரம்:தேர்வு முடிவு வெளியானதாக வதந்தி பரவியதால், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த, பிப்.,ல் தொடங்கி, மார்ச் வரை நடந்தது.
மெட்ரிக்குலேஷன், அரசு பள்ளிகளில் பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்படும்.
அதன்படி, அன்று காலை தேர்வு முடிவு வெளியாகி விடும். ஆனால், சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு வெளியாகும் வரை கூட தெரிவதில்லை. இந்நிலையில், நேற்று காலை, சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு வெளியானதாக வதந்தி பரவியது.
இதனால், பரபரப்பான சி.பி.எஸ்.இ., மாணவர்கள், ஆன்லைனில் தேர்வு முடிவை பார்க்க முடியாததால், பள்ளிகளுக்கு தொடர்பு கொண்டு விசாரிக்க ஆரம்பித்தனர். அதன்பிறகு தான், இது வதந்தி என, தெரியவந்தது. இதனால், பெற்றோர், மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், 'தேர்வு முடிவு வெளியானதாக பரவிய வதந்தியால், பெற்றோர் பள்ளிக்கு போன் செய்ய தொடங்கினர்.
எங்களிடம் விசாரித்த பிறகே தேர்வு முடிவு வெளியாகவில்லை என, நம்பினர். அடுத்த வாரம் தொடக்கம் அல்லது முடிவுக்குள் தேர்வு முடிவு வெளியாகும்' என்றனர்.

