/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அசில் ரக கோழிக்குஞ்சு முன்பதிவுக்கு அழைப்பு
/
அசில் ரக கோழிக்குஞ்சு முன்பதிவுக்கு அழைப்பு
ADDED : அக் 25, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், 4 முதல், 5 வார அசில் ரக கோழிக்குஞ்சுகள், விவசாயிகளுக்கு விற்கப்பட உள்ளன. 14 முதல், 15 வாரத்தில், சேவல் 1.350 கிலோ கிராம், பெண் கோழிகள், 1.150 கிலோ கிராம் எடையில் வளரும்.
ஓராண்டுக்கு, 90 - 130 முட்டைகள் வரை இடும். அதனால் விவசாயிகள், கோழி வளர்ப்போர், தொழில் முனைவோர் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். விபரம் பெற, திட்ட ஒருங்கிணைப்பாளரை, 9095513102 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

