/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அபாகஸ்' போட்டியில் முதலிடம் 8ம் வகுப்பு மாணவிக்கு பாராட்டு
/
அபாகஸ்' போட்டியில் முதலிடம் 8ம் வகுப்பு மாணவிக்கு பாராட்டு
அபாகஸ்' போட்டியில் முதலிடம் 8ம் வகுப்பு மாணவிக்கு பாராட்டு
அபாகஸ்' போட்டியில் முதலிடம் 8ம் வகுப்பு மாணவிக்கு பாராட்டு
ADDED : மார் 03, 2024 07:54 AM
பனமரத்துப்பட்டி, : பனமரத்துப்பட்டி, நிலவாரப்பட்டி ஊராட்சியில் மத்திய அரசின் கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா உறைவிடப்பள்ளி உள்ளது. அங்கு கடந்த வாரம் அபாகஸ் திறனறி போட்டி நடந்தது. அதில் அதே பள்ளியின், 8ம் வகுப்பு மாணவி ராகவி முதலிடம் பெற்றார். அந்த பள்ளி மாணவியர்களுக்கு தனியே ஒரு ஆசிரியர் பயிற்சி அளிக்கிறார்.
அவரை, குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் தெய்வநாயகம் நியமித்ததோடு, அவரே சம்பளமும் வழங்கி வருகிறார். மேலும் அபாகஸ் போட்டியில் அசத்திய ராகவிக்கு பாராட்டு விழா, நிலவாரப்பட்டி உறைவிடப்பள்ளியில் நேற்று நடந்தது. பனமரத்துப்பட்டி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பால் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் சுதாகர், மாணவி ராகவி, அபாகஸ் பயிற்சிக்கு ஏற்பாடு செய்த ஆசிரியர் தெய்வநாயகத்தை பாராட்டினர். ஆசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.