/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடலைக்கு 'ஜிப்சம்' இடுவதால் கூடுதல் மகசூல் பெறலாம்
/
கடலைக்கு 'ஜிப்சம்' இடுவதால் கூடுதல் மகசூல் பெறலாம்
கடலைக்கு 'ஜிப்சம்' இடுவதால் கூடுதல் மகசூல் பெறலாம்
கடலைக்கு 'ஜிப்சம்' இடுவதால் கூடுதல் மகசூல் பெறலாம்
ADDED : ஏப் 23, 2024 04:23 AM
வீரபாண்டி: நிலக்கடலை பயிருக்கு, 'ஜிப்சம்' இடுவதால் கூடுதல் மகசூல் பெற முடியும் என, விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது.
மானாவாரி நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள், ஜிப்சத்தை பிரித்து மண்ணில் போட்டு பயன் பெற முடியும். ஜிப்சம் இடும் போது மண்ணில் ஈரப்பதம் இருப்பது அவசியம். மழைநீர் கிடைத்தால் ஜிப்சம் உடனடியாக மண்ணில் கரைந்து பயிருக்கு நேரடியாக கிடைத்து விடும்.
கந்தகச்சத்து பயிருக்கு சரியான நேரத்தில் கிடைக்க, ஒரு ஹெக்டேருக்கு, 400 கிலோ ஜிப்சத்தை இரண்டாக பிரித்து, 200 கிலோ உரத்தை விதைப்பதற்கு முன் அடி உரமாகவும், 30 முதல் 45 நாட்களுக்குள் பயிர் பூக்க தொடங்கும் போது மழை வந்தவுடன், 200 கிலோ உரத்தை மேல் உரமாக போட்டு மண்ணை மூடி அணைக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் அடி உரமாக போட்ட விதை எளிதாக முளைத்து வரவும், துவக்கத்தில் செடிக்கு கந்தகச்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து தேவையான அளவு கிடைக்கும். மேல் உரமாக இடும் ஜிப்சத்தால் விழுதுகள் நன்றாக மண்ணில் இறங்கி, திரட்சியான பருப்புகள் உருவாவதற்கும், எண்ணெய் சத்து அதிகரித்து கூடுதல் மகசூல் கிடைக்கும். விவசாயிகள் இந்த வழிமுறையை பின்பற்றி லாபம் பெற வேண்டும் என, வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் கிரிஜா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன் ஆகியோர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

