/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவிலில் அறை கட்டுவதில் தகராறு தாசில்தாரிடம் மனு அளிக்க அறிவுரை
/
கோவிலில் அறை கட்டுவதில் தகராறு தாசில்தாரிடம் மனு அளிக்க அறிவுரை
கோவிலில் அறை கட்டுவதில் தகராறு தாசில்தாரிடம் மனு அளிக்க அறிவுரை
கோவிலில் அறை கட்டுவதில் தகராறு தாசில்தாரிடம் மனு அளிக்க அறிவுரை
ADDED : பிப் 21, 2024 07:27 AM
வீரபாண்டி : ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பின்புறம், அப்பகுதியை சேர்ந்த ஒரு பிரிவினர், குல தெய்வமான அய்யனாரப்பனுக்கு கோவில் கட்டி ஆண்டுதோறும் பழம் படைத்தல் பூஜை செய்கின்றனர். அதே வளாகத்தில் அய்யனாரப்பனின் தங்கை செல்லியம்மனுக்கு சிலை உள்ளது. அய்யனாரப்பன் கோவிலை பங்காளிகள் வகையறா, செல்லியம்மன் கோவிலை அவர்களின் மாமன், மச்சான் உள்ளிட்ட சொந்தக்காரர்கள் நிர்வகிக்கின்றனர்.
அங்கு உற்சவர் சிலைகள், பூஜை பொருட்களை வைக்க அறை உள்ளது. அதேபோல் செல்லியம்மன் சிலை வைக்க, சமீபத்தில் அறை கட்டும் பணி தொடங்கியது.
இதற்கு அய்யனாரப்பன் கோவில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க, தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். இரு நாட்களாக இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் போலீசார் பேச்சு நடத்தியும் பலனில்லை. நேற்று போலீசார், கோவில், அதை சுற்றியுள்ள இடங்கள், அரசு புறம்போக்கு நிலம் என்பதால், தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்து பிரச்னையை தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தி இரு தரப்பினரையும் அனுப்பினர்.