/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வடக்கு, தெற்கு சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்
/
வடக்கு, தெற்கு சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்
வடக்கு, தெற்கு சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்
வடக்கு, தெற்கு சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்
ADDED : மார் 27, 2024 07:52 AM
சேலம் : சேலம் வடக்கு, தெற்கு சட்டசபை தொகுதிகளில் சேலம் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் விக்னேஷ் அறிமுக கூட்டம் நடந்தது.
சேலம் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷ் அறிமுக கூட்டம், நேற்று நடந்தது. சேலம் வடக்கு சட்டசபை தொகுதி சார்பில், அஸ்தம்பட்டி பகுதி கழக செயலர் சரவணன் தலைமையில், வன்னியர் மஹாலில் நடந்தது. அதில், மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம், வேட்பாளர் விக்னேஷை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:
அ.தி.மு.க.,வில் சட்டசபை உறுப்பினர், லோக்சபா உறுப்பினர், அமைச்சர் என பதவி சுகம் அனுபவித்துவிட்டு, அ.தி.மு.க.,விற்கே துரோகம் செய்தவர்தான் தி.மு.க.,வின் சேலம் தொகுதி வேட்பாளர் என்று குற்றம் சாட்டினார். அவரை, நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் டெபாசிட் இழக்க செய்து, ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளிடம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தெற்கு எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, மாநகர அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் வெங்கடாசலம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், பகுதி, வட்டம் உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். அதேபோல் சேலம் மேற்கு சட்டசபை தொகுதி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.

