/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மலைப்பகுதியில் 30 கி.மீ.,க்கு மேல் வாகனத்தை இயக்கினால் நடவடிக்கை'
/
'மலைப்பகுதியில் 30 கி.மீ.,க்கு மேல் வாகனத்தை இயக்கினால் நடவடிக்கை'
'மலைப்பகுதியில் 30 கி.மீ.,க்கு மேல் வாகனத்தை இயக்கினால் நடவடிக்கை'
'மலைப்பகுதியில் 30 கி.மீ.,க்கு மேல் வாகனத்தை இயக்கினால் நடவடிக்கை'
ADDED : மே 18, 2024 12:55 AM
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து
பேசியதாவது:
விபத்து இடங்களை கண்டறிந்து, போலீசார், நெடுஞ்சாலை, போக்குவரத்து, வருவாய் உள்ளிட்ட துறைகள் இணைந்து ஆய்வு செய்து விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும். தொடர் விபத்து இடங்களில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை தேவை.
சாலை விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்வோர் ெஹல்மட் அணிதல், 4 சக்கர வாகனத்தில் செல்வோர் சீட் பெல்ட் அணிதல், நிர்ணயித்த வேகத்தில் வாகனத்தை இயக்குதல் போன்ற விதிகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டும்.
மலைப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட, 30 கி.மீ., வேகத்துக்கு மேல் வாகனத்தை இயக்கினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அனுபவமிக்க டிரைவர்கள் மட்டும் ஏற்காடு மலைப்பாதையில் வாகனத்தை இயக்க வேண்டும். விபத்துகளை முற்றிலும் தடுக்க தொடர் விழிப்புணர்வு நடவடிக்கையை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.