/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனுமதியின்றி பறந்த கட்சிக்கொடி 4 கார், 10 இருசக்கர வாகனம் பறிமுதல்
/
அனுமதியின்றி பறந்த கட்சிக்கொடி 4 கார், 10 இருசக்கர வாகனம் பறிமுதல்
அனுமதியின்றி பறந்த கட்சிக்கொடி 4 கார், 10 இருசக்கர வாகனம் பறிமுதல்
அனுமதியின்றி பறந்த கட்சிக்கொடி 4 கார், 10 இருசக்கர வாகனம் பறிமுதல்
ADDED : மார் 27, 2024 04:50 PM
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், புதிய சுண்ணாம்பு சூளையை சேர்ந்தவர் அம்பேத்கர், 45. அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் தமிழக தலைவரான இவர், சேலம் லோக்சபாவில் போட்டியிட நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதனுடன் இணைக்க வேண்டிய மேலும் ஒரு படிவத்தை, சேலம் கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் நேற்று வழங்கினார்.
முன்னதாக அவர் வந்த, 'ஸ்கார்பியோ' கார், மனுதாக்கல் நடக்கும் அலுவலகத்தில் இருந்து, 100 மீ.,க்கு வெளியே நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் விதிமீறி மனு பெறும் இடத்துக்கு அருகே நிறுத்தப்பட்டதால் போலீசார் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் சொல்ல முடியாத அவர், கார் சாவியை போலீசாரிடம் வழங்கிவிட்டு, காரில் இருந்த கட்சிகொடியை எடுத்துக்கொண்டு நடந்து சென்றுவிட்டார். காரை பறிமுதல் செய்தனர். நடத்தை விதி மீறியதாக சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
வேட்பாளருடன், 3 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளருடன், 5க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து வந்தன. அத்துடன் அனுமதியின்றி, கட்சிக்கொடியை பறக்கவிட்டதால், 'பார்ச்சுனர், இன்னோவா' கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அனுமதியின்றி, தி.மு.க., கொடியுடன் வலம் வந்த சைலோ காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தவிர, பகுஜன் சமாஜ் கட்சியினரின், 10 இருசக்கர வாகனங்களில் கட்சிக்கொடி கட்டியபடி மனுதாக்கல் செய்ய ஆர்ப்பரித்து வந்தனர். இதனால் அனைத்து இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

