/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
252 கிலோ புகையிலை பறிமுதல்; லாரியுடன் டிரைவர் கைது
/
252 கிலோ புகையிலை பறிமுதல்; லாரியுடன் டிரைவர் கைது
252 கிலோ புகையிலை பறிமுதல்; லாரியுடன் டிரைவர் கைது
252 கிலோ புகையிலை பறிமுதல்; லாரியுடன் டிரைவர் கைது
ADDED : ஏப் 29, 2024 06:59 AM
சேலம் : சேலம், லீபஜார் மயானம் அருகே, பள்ளப்பட்டி போலீசார், நேற்று முன்தினம் ரோந்தில் ஈடுபட்டனர்.
அங்கு ஒரு லாரி டிரான்ஸ்போர்ட் ஆபீஸ் எதிரே, கர்நாடக பதிவெண் கொண்ட ஈச்சர் லாரி அருகே நின்றிருந்த டிரைவர், போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றார். அவரை பிடித்து விசாரித்தனர். தர்மபுரி மாவட்டம் தொப்பூரை அடுத்த நல்லுார் சரவணகுமார், 42, என்பது தெரிந்தது. நான்கு மாதங்களாக பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து, சிறு வியாபாரிகளுக்கு விற்று வருவதும் தெரிந்தது. இதையடுத்து, 18 மூட்டைகளில், 252 கிலோ புகையிலை பொருட்களை, லாரியுடன் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு, 3.05 லட்சம் ரூபாய். சரவணகுமாரை கைது செய்த போலீசார், தலைமறைவான லாரி உரிமையாளர் உள்பட இருவரை தேடி வருகின்றனர்.