/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
200 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்
/
200 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்
ADDED : மார் 28, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : அரசு போக்குவரத்துக்கழகம், சேலம் கோட்ட மேலாண் இயக்குனர் பொன்முடி அறிக்கை:வார இறுதி நாட்கள், புனித வெள்ளியை முன்னிட்டு, மார்ச், 28(இன்று) முதல், ஏப்., 1 வரை சேலம் கோட்டம் சார்பில், 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களில் இருந்து பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, வேலுார் ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மறுமார்க்கத்திலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணியர், அரசு விரைவு போக்குவரத்துக்கழக முன்பதிவு மையங்கள், இணையதளம், செயலி வழியே முன்பதிவு செய்து பயணம் மேற் கொள்ளலாம்.

