/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாற்றுத்திறனாளிகள் 1,657 பேர் பூத்தில் ஓட்டளிக்கவே விருப்பம்
/
மாற்றுத்திறனாளிகள் 1,657 பேர் பூத்தில் ஓட்டளிக்கவே விருப்பம்
மாற்றுத்திறனாளிகள் 1,657 பேர் பூத்தில் ஓட்டளிக்கவே விருப்பம்
மாற்றுத்திறனாளிகள் 1,657 பேர் பூத்தில் ஓட்டளிக்கவே விருப்பம்
ADDED : ஏப் 04, 2024 04:54 AM
கோபி: கோபி சட்டசபை தொகுதியில், மாற்றுத்திறனாளிகள், 1,657 பேர் தபாலில் ஓட்டளிக்க விரும்பாமல், ஓட்டுச்சாவடியில் நேரடியாக ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் லோக்சபா தொகுதி, கோபி சட்டசபை தொகுதியில், 296 ஓட்டுச்சாவடிகளில், 2.55 லட்சம் வாக்காளர்களில், 85 வயதுக்கு மேற்பட்டோரில், 3,299 பேரும், மாற்றுத்திறனாளிகள், 1,821 பேரும் உள்ளனர். கடந்த மார்ச், 20 முதல், 25ம் தேதி வரை ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக சென்று, 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபாலில் ஓட்டளிக்க விரும்புவோரிடம், '12 டி' என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பெற்றனர். அவ்வாறு செய்ததில், 85 வயதுக்கு மேற்பட்ட, 3,299 பேரில், 699 பேர் மட்டுமே, தபால் ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்தனர். எஞ்சிய 2,600 பேர், தபாலில் ஓட்டளிக்க விரும்பாமல், ஓட்டுச்சாவடியில் நேரடியாக ஓட்டளிப்பதாக உறுதி தெரிவித்தனர்.
அதேபோல் கோபி தொகுதியில் மொத்தமுள்ள, 1,821 மாற்றுத்திறனாளி வாக்காளர்களில், 164 பேர் மட்டுமே தபாலில் ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்தனர். எஞ்சிய 1,657 மாற்றுத்திறனாளிகள், ஓட்டுச்சாவடியிலேயே ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக குடோனில் இருந்த, 70 வீல்சேர்கள் துாசு தட்டி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

