/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவில் பூசாரி பொறுப்பிற்காக மோதல் 10 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை
/
கோவில் பூசாரி பொறுப்பிற்காக மோதல் 10 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை
கோவில் பூசாரி பொறுப்பிற்காக மோதல் 10 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை
கோவில் பூசாரி பொறுப்பிற்காக மோதல் 10 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை
ADDED : நவ 05, 2024 06:42 AM
மேட்டூர்: கோவில் பூசாரி பொறுப்பிற்காக, இரு தரப்பினர் இடையே ஏற்-பட்ட மோதல் தொடர்பாக, 10 பேருக்கு தலா, 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 4,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், மேச்சேரி, ஓலைப்பட்டி ஊராட்சி, பாரப்-பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியில் பெரிய ஊர், சின்ன ஊர் என இரு கிராமங்கள் உள்ளன. காளி-யம்மன் கோவில் பூசாரியாக பெரிய ஊரை சேர்ந்தவர் இருந்தார். பூசாரியாக சின்ன ஊரை சேர்ந்தவரையும் நியமிக்க வேண்டும் என, கிராம மக்கள் கூறினர்.இதனால் கடந்த, 2012ல், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக பாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜனகன், 41, மேச்சேரி போலீசில் புகார் செய்தார். மோதல் தொடர்பாக பாரப்பட்டியை சேர்ந்த, 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த மோதலில் கணேசன், 42, என்-பவர் உயிரிழந்தார். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட பத்தபி-ரியன், 55, இரு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மீதம், 10 பேர் மீதான வழக்கு, நேற்று மேட்டூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.நீதிபதி தீபா விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட தங்கதுரை, 41, செம்மலை, 45, கோபி, 40, பழனிசாமி, 48, சக்திவேல், 37, சின்ராஜ், 42, மணிகண்டன், 38, சுதாகர், 39, ஹிட்லர், 36, மாதேஷ், 39 ஆகிய, 10 பேருக்கு தலா, 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 4,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

