ADDED : ஏப் 05, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மேற்கு தொகுதி நிலை கண்காணிப்பு குழு அலுவலர் சுகன்யா தலைமையில் குழுவினர் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது வந்த ஸ்பிளண்டர் பைக்கை நிறுத்தி சோதனையிட்டதில், 1,00,700 ரூபாய்
இருந்தது.
விசாரணையில் பைக்கை ஓட்டி வந்தவர், ஒமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டி, ஆலமரத்துகாலனியை சேர்ந்த, பார்மஸியில் மேலாளராக பணிபுரியும் பூவரசன், 28, என தெரிந்தது. அவரிடம் பணத்துக்கு ஆவணம், ரசீது இல்லை. இதனால் அந்த பணத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

