/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோடைக்கு இணையாக வாட்டும் வெயில் 10௦ டிகிரிக்கு மேலான வெப்பத்தால் அவதி

ADDED : செப் 17, 2024 01:39 AM
கோடைக்கு இணையாக வாட்டும் வெயில்
10௦ டிகிரிக்கு மேலான வெப்பத்தால் அவதி
ஈரோடு, செப். 17-
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக வெயிலின் அளவு, 100 டிகிரியை கடந்து நீடிப்பதால் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 10 நாட்களாக தினமும், 100 டிகிரியை கடந்து வெயில் வாட்டுகிறது. காலை, 7:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை வெயில் தாக்கம் சிறிதும் குறைந்தபாடில்லை. இதனால் பகலில் டூவீலரிலும், நடந்தும் செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர்.
பொதுவாக இம்மாதங்களில் மழை பொய்வதுடன், குளிர் காற்றும், வெயிலின் தாக்கமும் குறைந்து காணப்படும். ஆனால் இயல்புக்கு மாறாக, கோடை காலத்தைப்போல் வெயில் வாட்டுவதால், கட்டுமானம், விவசாயம் உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த, 4 நாட்களாக தொடர்ந்து, 103 டிகிரி வெயில் வாட்டுகிறது. இதனால் பகலில் மக்கள் வீடுகளில் முடங்குகின்றனர். இதன் தாக்கம் இரவிலும் வெக்கையாக எதிரொலிப்பதால், துாக்கத்தையும் இழந்து மக்கள் திண்டாடுகின்றனர்.