/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புது சந்தை வளாகம் திறந்தும் பஸ் ஸ்டாண்டில் கடைகள் விரிப்பு
/
புது சந்தை வளாகம் திறந்தும் பஸ் ஸ்டாண்டில் கடைகள் விரிப்பு
புது சந்தை வளாகம் திறந்தும் பஸ் ஸ்டாண்டில் கடைகள் விரிப்பு
புது சந்தை வளாகம் திறந்தும் பஸ் ஸ்டாண்டில் கடைகள் விரிப்பு
ADDED : பிப் 24, 2025 03:32 AM
ஓமலுார்: ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் தினசரி காய்கறி சந்தையில், 150க்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள் கடை அமைத்து வருகின்-றனர். அங்கு டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், மக்கள் நின்ற-படி காய்கறி வாங்கும்படி, 65 லட்சம் ரூபாய் மதிப்பில், 40 கடைகள் அடங்கிய புது சந்தை வளாகம் கட்டப்பட்டது. நேற்று முன்தினம், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.
ஆனால், 40 கடைகள் மட்டும் உள்ள நிலையில் யாருக்கு வழங்-குவது என, டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கும், ஓமலுார் காய்-கறி வியாபாரிகள் சங்கத்துக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்-ளது. இதில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவோருக்கு கடை வழங்க முயற்சிப்பதாக, சங்கத்தினர் குற்றம்சாட்டினர். தொடர்ந்து நேற்று, காய்கறி கடைகளை, பஸ் ஸ்டாண்டிலேயே வழக்கம்போல் வைத்தனர். இதுகுறித்து டவுன் பஞ்சாயத்து தலைவி செல்வராணியிடம் கேட்டபோது, 'சங்கம் சார்பில் அமைச்சரிடம் வழங்கப்பட்ட மனு, தற்போது கலெக்டரிடம் உள்-ளது. அந்த மனு விசாரணை முடிந்தபின், கடைகள் கோரும் நபர்-களிடம் மனுக்கள் பெற்று, ஆராய்ந்து விவசாயிகள், வியாபாரிக-ளுக்கு கடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 40 கடைகள் போக, மற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக வழங்க நட-வடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

