/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கவர்ச்சி திட்டங்களை கூறி ஏமாற்றும் ஆட்சி கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு
/
கவர்ச்சி திட்டங்களை கூறி ஏமாற்றும் ஆட்சி கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு
கவர்ச்சி திட்டங்களை கூறி ஏமாற்றும் ஆட்சி கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு
கவர்ச்சி திட்டங்களை கூறி ஏமாற்றும் ஆட்சி கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 15, 2024 04:03 AM
ஆத்துார்: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு, ஆத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட செல்லியம்பாளையம், அப்பமசமுத்திரம், உடையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூக்கள் துாவியும் வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து, அ.தி.மு.க., கொடி நிறத்தில் உள்ள பலுான்களுடன், இரட்டை இலை சின்னத்துக்கு, அ.தி.மு.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், ஓட்டு கேட்டு சென்றனர்.
அப்போது வேட்பாளர் குமரகுரு பேசியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், குடும்ப ஆட்சி நடத்துகின்றனர். மக்களுக்குரிய திட்டங்களை நிறுத்திவிட்டனர். மக்களை ஏழ்மை நிலையில் வைத்திருப்பது தான், தி.மு.க., ஆட்சியின் சாதனை. மாநில அரசின் சரியான திட்டமிடல் இல்லாததால் தமிழக வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தில் மீட்பு பணி கூட மேற்கொள்ள முடியாததால் மக்கள் தவித்ததே, தி.மு.க.,வின் அலங்கோல ஆட்சிக்கு சாட்சி.
நான், 3 முறை தொடர்ந்து, எம்.எல்.ஏ.,வாக இருந்தவன். மக்களுக்கு சரியான முறையில் திட்டங்கள் செய்ததால் என்னை வெற்றி பெறச்செய்தனர். இ.பி.எஸ்., உள்ளிட்ட கட்சியினர், மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் உள்ளனர். தி.மு.க.,வில் குடும்ப கட்சியாக தான் உள்ளது. 'திராவிட மாடல்' என்பது வளர்ச்சி கிடையாது; கவர்ச்சியான திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றும் ஆட்சியாக தான் உள்ளது. அ.தி.மு.க., வெற்றி பெற்றால் தான், தமிழகத்தின் உரிமைகளை மீட்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், ஆத்துார் கிழக்கு ஒன்றிய செயலர் ரஞ்சித்குமார், நரசிங்கபுரம் நகராட்சி கவுன்சிலர் கோபி, தே.மு.தி.க., மாவட்ட செயலர் இளங்கோவன், ஒன்றிய செயலர் பச்சமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

