/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., ரூ.500; அ.தி.மு.க., ரூ.250 வாக்காளருக்கு 'கவனிப்பு' ஆரம்பம்

ADDED : ஏப் 15, 2024 03:37 AM
சேலம்: வரும் ௧௯ல் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதனால் சேலம் லோக்சபா தொகுதி, பனமரத்துப்பட்டியில் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர், வாக்காளர்களை கவனிக்கும் பணியில் நேற்று இரவு ஈடுபட்டனர்.
இரு கட்சிகள் சார்பிலும் பூத் வாரியாக, 70 சதவீத வாக்காளர்களை கவனிக்க, நேற்று பகலில், நிர்வாகிகளிடம், 'வைட்டமின் ப' வழங்கப்பட்டது. இரவு வீடுதோறும் சென்ற, தி.மு.க.,வினர், 500 ரூபாய், அ.தி.மு.க.,வினர், 250 ரூபாயை, வாக்காளர்களிடம் வழங்கினர்.
இதுகுறித்து மல்லுார் அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:
தேர்தல் செலவை முழுமையாக செய்வதாக ஒப்புக்கொண்டதால் புதுமுகத்துக்கு, 'சீட்' கொடுத்தனர். தற்போது, 250 ரூபாய் கொடுத்தால் சமாளிக்க முடியாது. தி.மு.க.,வுக்கு இணையாக கொடுத்தால்தான் ஓட்டு வாங்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.