/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பெண்கள் ஓட்டு போட்டாலே தர்மபுரியில் எளிதாக வெற்றி'
/
'பெண்கள் ஓட்டு போட்டாலே தர்மபுரியில் எளிதாக வெற்றி'
'பெண்கள் ஓட்டு போட்டாலே தர்மபுரியில் எளிதாக வெற்றி'
'பெண்கள் ஓட்டு போட்டாலே தர்மபுரியில் எளிதாக வெற்றி'
ADDED : மார் 24, 2024 01:40 AM
மேட்டூர், ''பெண்கள் ஓட்டு போட்டாலே தர்மபுரியில் தி.மு.க., எளிதாக வெற்றி பெற்று விடலாம்,'' என, அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.
தர்மபுரி லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணி அறிமுகம், செயல்வீரர் கூட்டம், மேட்டூர் சட்டசபை தொகுதி நவப்பட்டியில் நேற்று நடந்தது. அதில் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:
தர்மபுரி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர், 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு காரணம், தி.மு.க., அரசின் மகளிர் திட்டங்கள்தான். மகளிருக்கு இலவச பஸ் பயணம், 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம், 1,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. இதன் பலனாக, பெண்கள் ஓட்டு போட்டாலே தர்மபுரியில் எளிதாக வெற்றி பெற்று விடலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து தி.மு.க., வேட்பாளர்களான சேலம் செல்வகணபதி, தர்மபுரி மணி பேசினர். மேட்டூர் சட்டசபை தொகுதி நகராட்சி ஒன்றிய, பேரூர் தி.மு.க., நிர்வாகிகள், கிளை செயலர்கள், உறுப்பினர்கள், அதன் கூட்டணியை சேர்ந்த காங்., வி.சி., த.வா.க., மா.கம்யூ., உள்பட, 15 கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

