/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் சிறையில் கைதியிடம் சி.பி.சி.ஐ.டி., விசாரணை
/
சேலம் சிறையில் கைதியிடம் சி.பி.சி.ஐ.டி., விசாரணை
ADDED : செப் 11, 2024 02:01 AM
சேலம்:சேலம் மத்திய சிறையில், ஆயுள் தண்டனை கைதியிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்தவர் சிவகுமார், 30. இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலுார் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறை டி.ஐ.ஜி., வீட்டு வேலைக்கு சென்ற சிவகுமார், 4.25 லட்சம் ரூபாய், வெள்ளி பொருட்களை திருடியதாகவும், இதனால் அவரை, சிறை வார்டன்கள் தாக்கியதாகவும் புகார் எழுந்தது.
சிவகுமாரின் தாய், 'மகன் திருடிவிட்டதாக கூறி அவனை சித்ரவதை செய்கின்றனர்' என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, செப்., 17க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும் வேலுார் சிறையில் இருந்த சிவகுமார், செப்., 6ல் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் வேலுார் சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி., வினோத் சாந்தாராம் தலைமையில் குழுவினர், சேலம் மத்திய சிறையில் சிவகுமாரிடம் நேற்று விசாரித்தனர். இது வீடியோ பதிவு செய்யப்பட்டது.

