/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரேஷன் கார்டுக்கு லஞ்சம் பெற்ற கூட்டுறவு உதவியாளர் கைது
/
ரேஷன் கார்டுக்கு லஞ்சம் பெற்ற கூட்டுறவு உதவியாளர் கைது
ரேஷன் கார்டுக்கு லஞ்சம் பெற்ற கூட்டுறவு உதவியாளர் கைது
ரேஷன் கார்டுக்கு லஞ்சம் பெற்ற கூட்டுறவு உதவியாளர் கைது
ADDED : ஏப் 04, 2024 10:32 PM
ஓமலுார்:சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா பண்ணப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 59. பூசாரிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், 20 ஆண்டுக்கு மேலாக உதவியாளராக பணிபுரிகிறார்.
இவரிடம் பூசாரிப்பட்டி, வைரங்காட்டை சேர்ந்த செல்வராணி, 27, என்பவர், புது ரேஷன் கார்டு கேட்டு அணுகினார்.
அதற்கு, 5,000 ரூபாய் செலவாகும் என ராஜேந்திரன் கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த பெண், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.
அதன்படி நேற்று மதியம், குறவன்காடு ரேஷன் கடை அருகே செல்வராணி முதல்கட்டமாக, ராஜேந்திரனிடம், 4,000 ரூபாய் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்பு துறையின் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், ராஜேந்திரனை கைது செய்தனர்.