தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வெவ்வேறு விபத்து2 தொழிலாளி சாவு

வெவ்வேறு விபத்து2 தொழிலாளி சாவு

வெவ்வேறு விபத்து2 தொழிலாளி சாவு


ADDED : ஏப் 02, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2025 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெவ்வேறு விபத்து2 தொழிலாளி சாவு

தாரமங்கலம்,:தாரமங்கலம் அருகே பைப்பூரை சேர்ந்தவர் சேகர், 52. பெயின்டரான இவர் கடந்த மார்ச், 25ல் வேலைக்கு சென்றுவிட்டு, மாலை 6:45 மணிக்கு பழக்காரனுார் சாலை வளைவில் மொபட்டில் சென்றபோது நிலை தடுமாறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சேகர், நேற்று இறந்தார்.

அதேபோல் தாரமங்கலம், கோட்டைமேட்டை சேர்ந்த, தறித்தொழிலாளி கோபி, 22. இவர் கடந்த மார்ச், 27 காலை, 9:00 மணிக்கு, ஸ்பிளண்டர் பைக்கில் கொய்யாதோப்பு பஸ் ஸ்டாப் அருகே வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி விழுந்தார். நெற்றியில் பலத்த அடிபட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், கோபி நேற்று இறந்தார். இரு சம்பவங்கள் குறித்தும், தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us