/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
390 ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி தீவிரம்
/
390 ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி தீவிரம்
390 ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி தீவிரம்
390 ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி தீவிரம்
ADDED : ஏப் 07, 2024 03:36 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதிலுள்ள, 3,257 ஓட்டுச்சாவடிகளுக்கு தேவைக்கு ஏற்ப, 21 சதவீத கூடுதல் ஒதுக்கீட்டில், 3,936 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுவிட்டன. இந்நிலையில் போட்டியிடும் வேட்பாளர் எண்ணிக்கை, 15ஐ கடந்து, 25 பேர் உள்ளதால் அதற்கேற்ப மீண்டும், 21 சதவீத கூடுதல் ஒதுக்கீட்டில், 4,312 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கடந்த, 2ல் சட்டசபை தொகுதி வாரியாக அனுப்பும் பணி நடந்தது. இதில், 390 இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதை ஈடுகட்ட, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து, 390 இயந்திரங்கள் சேலத்துக்கு வரவழைக்கப்பட்டன.
அவை கலெக்டர் அலுவலகம் பின்புறமுள்ள பாதுகாப்பு அறையில் வைத்து, பெங்களூரு பெல் பொறியாளர் குழுவினரால் சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பணி இன்று முடிந்து, கணினி உதவியுடன் ரேண்டம் முறையில் தேர்வு செய்து, சட்டசபை தொகுதி வாரியாக அனுப்பப்படும் என, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

