தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேலத்துக்கான பறவைதேர்ந்தெடுக்க அழைப்பு

சேலத்துக்கான பறவைதேர்ந்தெடுக்க அழைப்பு

சேலத்துக்கான பறவைதேர்ந்தெடுக்க அழைப்பு


ADDED : ஏப் 12, 2025 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2025 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலத்துக்கான பறவைதேர்ந்தெடுக்க அழைப்பு

சேலம்:சேலம் வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி அறிக்கை:சேலம், ஆத்துார் வன கோட்டம், பறவையியல் கழகம் இணைந்து, சேலத்துக்கான பறவையை தேர்வு செய்ய, மக்கள் அனைவரையும் அழைக்கிறோம். நம் சேலம் பறவையை தேர்ந்தெடுக்கும் இந்நிகழ்வு, பல்லுயிர் பாதுகாப்பு, பறவையியல் சார்ந்த ஆர்வத்தை துாண்டுவது, வன உயிரின குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடத்தப்படுகிறது.

இதற்கு கருந்தோள் பருந்து, பவளக்கால் உள்ளான், செம்மார்பு குக்குறுவான், இந்திய பாம்புத்தாரா, காட்டு பாம்புக்கழுகு, ஆற்று ஆலா, சோலைப்பாடி ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் ஒன்றை, https://birdofsalem.tnfdsutrula.com என்ற இணையவழி மூலம் மக்கள் தேர்வு செய்யலாம். இல்லை எனில் கலெக்டர் அலுவலகம், ஏற்காடு அண்ணா பூங்கா, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, ஆத்துார் அருகே ஆணைவாரி முட்டல், மேட்டூர் அணை பூங்கா ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில், விருப்ப பறவை பெயரை தேர்வு செய்து போடலாம். வரும், 30 வரை தேர்வை பதிவு செய்யலாம். இதற்கான முடிவு, மே, 4ல் வெளியிடப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us