/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் உபரிநீரால் நிரம்பிய 11 ஏரிகள்
/
மேட்டூர் உபரிநீரால் நிரம்பிய 11 ஏரிகள்
ADDED : ஆக 10, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் அணை கடந்த, 30ல் நிரம்பியது. அதன் உபரிநீரை, 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை, திப்பம்பட்டி நீரேற்று நிலை-யத்தில், 31ல் சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார்.
இதில் முதல்கட்டமாக, 79 ஏரிகளுக்கு உபரிநீர் கொண்டு செல்-லப்படுகிறது. உபரிநீரின் ஒரு பகுதியில் எம்.காளிப்பட்டியில் இருந்து பிற ஏரிகளுக்கும், நங்கவள்ளி ஏரியில் நிரப்பி அப்பகு-தியில் அடுத்தடுத்து உள்ள ஏரிகளிலும் நிரப்பப்படுகிறது. 10 நாட்களில் எம்.காளிப்பட்டி உள்பட, 6 ஏரிகள், நங்கவள்ளி உள்-பட, 5 ஏரிகள் என, நேற்று வரை, 11 ஏரிகளில் நீர் நிரப்பப்
பட்டுள்ளது.

