/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சித்தர்கோவில் கும்பாபிஷேக விழாவில் ஹோம குண்டம் அமைப்பதில் சர்ச்சை
/
சித்தர்கோவில் கும்பாபிஷேக விழாவில் ஹோம குண்டம் அமைப்பதில் சர்ச்சை
சித்தர்கோவில் கும்பாபிஷேக விழாவில் ஹோம குண்டம் அமைப்பதில் சர்ச்சை
சித்தர்கோவில் கும்பாபிஷேக விழாவில் ஹோம குண்டம் அமைப்பதில் சர்ச்சை
ADDED : செப் 11, 2024 07:18 AM
மகுடஞ்சாவடி: சேலம் அருகே கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 15ல் நடக்கவுள்ளது. இதற்காக கோவில் வளாகம் அருகே ஹோம குண்டம் அமைக்கும் பணி நடந்தது. வழக்கத்-துக்கு மாறாக கோவில் நிர்வாகத்தினர், ஒரே இடத்தில் சிவாச்சாரி-யார்களுக்கும், தமிழ் ஓதுவார்களுக்கும் குண்டங்களை அமைத்-தனர்.
இதனால் ஊர்மக்கள், சிவாச்சாரியார்கள், கோவில் அலுவலகத்தை நேற்று காலை, முற்றுகையிட்டனர். கோவில் செயல் அலுவலர் ராஜேஷ், சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா, உதவி கமிஷனர்கள், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார் நலச்சங்க தமிழ் மாநில செயலர் கபிலன் உள்ளிட்டோர் முன்னிலையில் கூட்டம் நடந்-தது.அதில் மக்கள், சிவாச்சாரியார்கள், 'கடந்த காலத்தில் கும்பாபி-ஷேகம் ஆகம விதிப்படி நடந்தது. கருவறையில் சிவாச்சாரியார் மட்டும் செல்ல முடியும்.தற்போது தமிழ் வேள்வி நடத்த யாக குண்டம் அமைத்தால் அவர்களும் கருவறைக்குள் நுழைவர். இது ஆகம விதியை மீறும் செயல். எனவே தமிழ் வேள்வி நடத்த தனியே யாக குண்டம் அமைக்கக்கூடாது. வேண்டுமெனில்
அவர்கள் மந்திரம் ஓதலாம்' என்றனர்.இதையடுத்து சிவாச்சாரியார்கள் தரப்பில் விளக்க கடிதம், செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக சேலத்தில் நாளை (இன்று) பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க கூட்-டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

