தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பட்டதாரி இளைஞரை கரம்பிடித்த ஆசிரியை

பட்டதாரி இளைஞரை கரம்பிடித்த ஆசிரியை

பட்டதாரி இளைஞரை கரம்பிடித்த ஆசிரியை


ADDED : செப் 06, 2025 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2025 02:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாழப்பாடி, வாழப்பாடி, நீர்முள்ளிக்குட்டை ஊராட்சி சிவசக்தி நகர் தெற்கு காட்டை சேர்ந்தவர், சபரிநாதன், 24. பி.எஸ்.சி., முடித்துள்ளார்.

இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தர்ஷினிதேவி, 23. எம்.காம்., முடித்துவிட்டு, கூட்டத்துப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இருவரும் காதலித்து வந்தனர். இது பெண் வீட்டாருக்கு தெரிந்து, எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

நேற்று காலை, காரிப்பட்டி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.காரிப்பட்டி போலீசார், இரு வீட்டினரை அழைத்து சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us