தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மருந்தாளுனர் போட்டித்தேர்வுஇலவச பயிற்சி தொடக்கம்

மருந்தாளுனர் போட்டித்தேர்வுஇலவச பயிற்சி தொடக்கம்

மருந்தாளுனர் போட்டித்தேர்வுஇலவச பயிற்சி தொடக்கம்


ADDED : ஏப் 10, 2025 02:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 02:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மருந்தாளுனர் போட்டித்தேர்வுஇலவச பயிற்சி தொடக்கம்

சேலம்:மருத்துவ பணியாளர் தேர்வாணையம் சார்பில், 425 மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப, கடந்த மார்ச், 10 வரை விண்ணப்பம் பெறப்பட்டது. விரைவில் எழுத்துத்தேர்வு நாள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் அப்போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு, சேலம், கோரிமேடு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.

மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் மணி பேசுகையில், ''சனிதோறும் காலை, 10:00 முதல், மாலை, 4:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடத்தி, சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்படும். தேர்வு நாள் அறிவிப்புக்கு பின், பயிற்சி வகுப்பு நேரம், தேவைக்கு ஏற்ப அதிகரிக்கப்படும்,'' என்றார்.

நடப்பு தேர்வுக்கு பதிவு பெற்ற, 142 பேரில், 49 பேர் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us