ADDED : ஏப் 10, 2025 02:16 AM
'அமோகம்' ரெஸ்டாரன்ட், ஸ்வீட்ஸ் திறப்பு
ஓமலுார்:'ஹென்றி ஊல்சி' பேக்கரியின் மற்றொரு அங்கமாக, சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரி எதிரே, 'அமோகம் ரெஸ்டாரன்ட், ஸ்வீட்ஸ், ஸ்னாக்ஸ்' கடை திறப்பு விழா நேற்று நடந்தது.
தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தலைவர் வெங்கடசுப்பு, ரிப்பன் வெட்டி, ரெஸ்டாரன்டை திறந்து வைத்தார். ஸ்வீட்ஸ், ஸ்னாக்ஸ் பிரிவை, கே.பி.என்., டிராவல்ஸ் நிர்வாக இயக்குனர் நடராஜன் தொடங்கி வைத்தார். 'கிச்சன்' பிரிவை, திரிவேனி நிறுவன சேர்மன் பாலசுப்பிரமணியன் திறந்து வைத்தார். முதல் விற்பனையை நாவல் பிராப்பர்ட்டீஸ் அண்ட் டெவலப்பர்ஸ் நிறுவன இயக்குனர் பிரேமலதா கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
சேலம் ஏரோ பார்க் சுந்தரம், எஸ்.கே.எஸ்., மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமார், செந்தில் பப்ளிக் பள்ளி நிறுவனர் கந்தசாமி, நியூ ஹென்றி ஊல்சி நிர்வாக இயக்குனர் சதீஷ்குமார், சித்திரைச்செல்வி, சரவணக்குமார், சுஜிதா பங்கேற்றனர்.
புது ரெஸ்டாரன்ட் குறித்து, சதீஷ்குமார் கூறுகையில், ''ஏசி வசதியுடன் ஒரே நேரத்தில், 140 பேர் அமர்ந்து சாப்பிடலாம். 250 பேர் அமரும்படி, 'ஏசி'யுடன் கூடிய ஹால் உள்ளது. வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது.நவதானிய தோசை, வாழைப்பூ மசால் தோசை, பனானா பிளேவர் மசாலா தோசை உள்பட, ஆரோக்கியம்,
சத்தான பல்வேறு உணவு வகைகள் வழங்கப்படும்,'' என்றார்.
