தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பாதிக்கப்பட்ட அனைவருக்கும்இழப்பீடு வழங்க கோரிக்கை

பாதிக்கப்பட்ட அனைவருக்கும்இழப்பீடு வழங்க கோரிக்கை

பாதிக்கப்பட்ட அனைவருக்கும்இழப்பீடு வழங்க கோரிக்கை


ADDED : மார் 18, 2025 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாதிக்கப்பட்ட அனைவருக்கும்இழப்பீடு வழங்க கோரிக்கை

சேலம்:மேட்டூர், சின்னதண்டா பகுதியை சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது நடந்த, 'என்கவுன்டர், கைது' ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. அதில், 189 பேரிடம் விசாரித்து, 2007ல், 89 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. அதற்கு தமிழக, கர்நாடக அரசுகள் இணைந்து, 10 கோடி ரூபாய் வழங்கிய நிலையில், 3 கோடி மட்டும் இழப்பீடாக வழங்கப்பட்டது. ஆணைய விசாரணையின்போது, ஊரை விட்டு வெளியே சென்றவர்கள், போதிய ஆதாரம் இல்லாதவர்கள் என பலரும் விடுபட்டுள்ளனர். மீண்டும் முழுமையாக விசாரித்து, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us