/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கூடுதல் வகுப்பறை கட்டமாணவர்கள் கோரிக்கை
/
கூடுதல் வகுப்பறை கட்டமாணவர்கள் கோரிக்கை
ADDED : மார் 18, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுதல் வகுப்பறை கட்டமாணவர்கள் கோரிக்கை
சேலம்:சங்ககிரி, அரசிராமணி செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கிறோம். சில ஆண்டுக்கு முன், உயர்நிலைப்பள்ளியாக இருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதற்கான வசதிகள் செய்து தரப்படவில்லை. குறிப்பாக கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால், தற்காலிக கூடாரம், ஆய்வகங்களில் வகுப்பு நடக்கிறது. மாணவர்கள் நலன்கருதி கூடுதல் வகுப்பறைகளை கட்டித்தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

