/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குழாய் உடைந்து வெளியேறும் குடிநீரால் பொதுமக்கள் அவதி
/
குழாய் உடைந்து வெளியேறும் குடிநீரால் பொதுமக்கள் அவதி
குழாய் உடைந்து வெளியேறும் குடிநீரால் பொதுமக்கள் அவதி
குழாய் உடைந்து வெளியேறும் குடிநீரால் பொதுமக்கள் அவதி
ADDED : செப் 10, 2024 07:05 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், நத்தமேடு பிரிவு எதிரில் குழாய் உடைந்து, காவிரி குடிநீர் வெளியேறி வருகிறது.
சாலையோரத்தில் தேங்கிய தண்ணீரால், மண் பாதை சேறு, சக-தியாக மாறியுள்ளது. அந்த வழியாக செல்லும் கனரக வாக-னங்கள், சேறு கலந்த தண்ணீரை, வாரி அடிக்கிறது. குழாய் உடைந்து, இரண்டு மாதத்திற்கு மேலாகியும் சரி செய்யப்பட-வில்லை. கனரக வாகனங்கள் செல்லும்போது, சாலையோரம் ஒதுங்கும் மக்கள், சேற்றில் வழுக்கி விழுகின்றனர்.
தண்ணீர் தேங்கிய பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இரு சக்கர வாகன ஓட்டிகளும் சேற்றில் விழுந்து காயமடைகின்றனர். குளம் போல் தேங்கியுள்ள தண்ணீரால், பள்ளி மாணவ, மாண-வியர் பெரும் சிரமத்திற்கு
ஆளாகின்றனர். குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.