/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதல்வர் கோப்பை போட்டி 2,500 மாணவியர் பங்கேற்பு
/
முதல்வர் கோப்பை போட்டி 2,500 மாணவியர் பங்கேற்பு
ADDED : செப் 12, 2024 07:16 AM
சேலம்: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, சேலத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில் பள்ளி மாணவர்கள் பங்கேற்-றனர். தொடர்ந்து மாணவியர் விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது.
சேலம் காந்தி மைதானத்தில் வாலிபால், சதுரங்கம், கால்பந்து உள்ளிட்ட போட்டிகள், ஒய்.எம்.சி.ஏ.,வில் கேரம், சிறுமலர் மேல்-நிலைப்பள்ளியில் ஹாக்கி, நெத்திமேடு ஜெயராணி பள்ளியில் ஹேண்ட்பால், பெரியார் பல்கலையில் தடகளம், கருப்பூர் கொங்கு பள்ளியில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து,
2,500 மாணவியர், திறமைகளை வெளிப்ப-டுத்தினர். தனிநபர் போட்டியில் வெற்றி பெற்று முதல் இடம் பிடித்தவர்கள், மாநில போட்டிக்கு தகுதி
பெற்றனர். குழு போட்-டிகளில் வெற்றி பெற்ற அணியில் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்-பட்டு, அணி உருவாக்கப்படுகிறது. இன்று
மாற்றுத்திறனாளிக-ளுக்கு போட்டி நடக்கிறது என, மாவட்ட விளையாட்டு அலு-வலர் சிவரஞ்சன் தெரிவித்தார்.

