/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா
/
நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா
ADDED : மார் 11, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை நீதிமன்றத்தில் மகளிர் தினவிழா நடந்தது. சிவில் நீதிமன்ற நீதிபதி மனிஷ்குமார் தலைமை வகித்தார்.
அவர் பேசுகையில், பெண்கள் இன்னும் தன்னிறைவு அடையவில்லை. பல்வேறு இன்னல்களால் பாதிக்கப்படுகின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
வக்கீல் சங்க தலைவர் சிவராமன் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பெண்களுக்கான கோலபோட்டி நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வக்கீல் சங்க செயலாளர் சவுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.

