/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.9 லட்சத்தில் தோண்டப்பட்ட திறந்தவெளி கிணறு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா மெத்தனப் போக்கில் ஊராட்சி நிர்வாகம்

ADDED : நவ 11, 2025 03:27 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே காஞ்சிரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மேலவலசை தென்னந்தோப்பு பகுதியில் ரூ.9 லட்சத்தில் தோண்டப்பட்ட கிணறு 5 மாதங்களாக பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது.
15வது மாநில நிதிக்குழு மூலம் வெட்டப்பட்ட பெரிய வட்டக்கிணறு அப்பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்டது.
இதே போன்று லட்சுமிபுரம் செல்லும் வழியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.8.20 லட்சம் மதிப்பீட்டில் நடந்த 4 மாதங்களுக்கு முன்பு திறந்த வெளி கிணறு அமைக்கப்பட்டது.
இரண்டு பெரிய கிணறுகளிலும் தண்ணீர் எடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
அலவாய்கரைவாடியை சேர்ந்த ராஜ்குமார் கூறியதாவது: காஞ்சிரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண இரண்டு கிணறுகள் அமைக்கப் பட்டது. அவற்றில் இருந்து பைப்லைன் மற்றும் மோட்டார் அறை அமைக்க வேண்டும். அவையும் இதுவரை அமைக்கப்படவில்லை.
குடிநீருக்காக ரூ.9 லட்சம் மற்றும் ரூ.8.2 லட்சத்தில் அமைக்கப்பட்ட கிணறுகள் இதுவரை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யாமல் வீணாகி உள்ளது.
எனவே மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை காஞ்சிரங்குடி ஊராட்சியில் இரண்டு கிணறுகளையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் அரசு நிதி வீணடிப்பது தவிர்க்கப்படும்.
லட்சுமிபுரம், கோகுலம் நகர், ஸ்ரீநகர், செங்கழுநீரோடை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு தண்ணீர் வசதிகளை பூர்த்தி செய்ய வழிவகுக்கும் என்றார்.