/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நுாறு நாள் வேலை இல்லாததால் இணைப்பை எதிர்க்கும் கிராம மக்கள்
/
நுாறு நாள் வேலை இல்லாததால் இணைப்பை எதிர்க்கும் கிராம மக்கள்
நுாறு நாள் வேலை இல்லாததால் இணைப்பை எதிர்க்கும் கிராம மக்கள்
நுாறு நாள் வேலை இல்லாததால் இணைப்பை எதிர்க்கும் கிராம மக்கள்
ADDED : டிச 24, 2024 11:43 PM
ராமநாதபுரம்:மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நுாறு நாள் வேலை திட்டம் இல்லாததால், அதை நம்பியுள்ள மக்கள், அரசின் நகரமயமாக்கல் திட்டத்தில் ஊராட்சியை இணைக்க கண்டனம் தெரிவித்து போராடுகின்றனர்.
தமிழக நிர்வாகக் கட்டமைப்பை, உள்ளூர் அளவில் மாற்றி அமைக்கும் முயற்சியை, மாநில அரசு தற்போது எடுத்து வருகிறது. மக்கள் தொகை, வரி வசூல், டவுன் அருகேயுள்ள கிராம ஊராட்சிகளைப் பேரூராட்சிகளாக மாற்றுவது அல்லது ஏற்கனவே இருக்கும் பேரூராட்சி, நகராட்சி அல்லது மாநகராட்சிகளோடு இணைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
பெரிய தொழிற்சாலைகள், ஆலைகள் இல்லாமல் தொழில் வளர்ச்சி இல்லாத நிலையில் கிராம மக்கள் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே நம்பியுள்ளனர்.
குறிப்பாக ஆண்டுக்கு 6 மாதம் மீன்பிடி, விவசாயக்கூலி வேலை செய்கின்றனர். அதன் பிறகு நுாறு நாள் வேலை வருமானத்தை வைத்து வாழ்கின்றனர். இதன் காரணமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுடன் தங்களது கிராமங்களை இணைக்க கூடாது என போராட்டங்கள் மூலம் மக்கள் அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எனவே, நகரமயமாக்கல் திட்டத்தில் இணைக்கப்பட உள்ள கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தொழிற்சாலைகள், ஆலைகளில் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.

